• Sun. Sep 8th, 2024

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு..!

ByA.Tamilselvan

Jul 23, 2022

தமிழகம் முழுவதும் நாளை (24-ம் தேதி), 7 விதமான பதவிகளின் 7382 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது.இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் என 7 விதமான பதவிகளின் 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதனிடையே குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *