• Fri. Feb 14th, 2025

#TNBudget2021 அடிதூள்… தமிழகத்தில் 6 இடங்களில் இதை அமைக்கப்போறாங்களாம்!

By

Aug 13, 2021

மீன்வளத்துறை மற்றும் நீர் மேலாண்மை தொடர்பாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் இதோ…

தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.433 கோடி ஒதுக்கீடு.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைகம் ரூ.150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ரூ.6,607 கோடி நிதி ஒதுக்கீடு.

மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர் தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும்.

பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.1,360 கோடி ஒதுக்கீடு.

சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு ரூ.4,807 கோடி நிதி ஒதுக்கீடு.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.

79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ரூ.3 கோடி மீண்டும் அளிக்கப்படும்.