• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

3 நாட்களில் திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.8.91 கோடியை தொட்டது…

Byகாயத்ரி

Jan 3, 2022

புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் முன்பதிவு செய்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை 21,263 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 8,629 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியலில் காணிக்கையாக ரூ.2.83 கோடி செலுத்தி இருந்தனர்.

புத்தாண்டு தினத்தன்று 36,560 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து, 12,270 பேர் முடி காணிக்கையும், உண்டியலில் ரூ.2.15 கோடி காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.நேற்று 38,894 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 14,084 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.93 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். புத்தாண்டையொட்டி கடந்த 3 நாட்களில் 96,917 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 34,984 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். ரூ.8.91 கோடி உண்டியலில் காணிக்கையாக செய்துள்ளனர்.ஏழுமலையான் கோவிலில் வருகிற 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சொர்க்கவாசல் வழியாக சாமானிய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

அதேபோல் 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை வி.ஐ.பிக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டும் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.மற்ற பக்தர்கள் கொண்டுவரும் வி.ஐ.பி தரிசன பரிந்துரை கடிதம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது. எனவே பக்தர்கள் யாரும் வி.ஐ.பி தரிசன பரிந்துரை கடிதம் கொண்டு வரவேண்டாம்.வி.ஐ.பி.க்கள் சிபாரிசு கடிதம் அளிக்க வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.