கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு தோஸ்த் வாகனம் மூலம் அர்ஜுன் என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
அப்போது கரூர் மாவட்டம் தளைவா பாளையம் பகுதியில் தோஸ்த் வாகனத்தின் டயர் வெடித்து தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளிகள் சாலை முழுவதும் சிதறியது. மேலும் ஓட்டுநர் அர்ஜுனன் என்பவருக்கு சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார்.

தக்காளிலோடு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிரேன் உதவியுடன் தோஸ்த் வாகனத்தை மீட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.