குமரி மாவட்டத்தில் கல்லூரி வானம் ஒன்று மூணாறு மலைப்பகுதிக்குச் சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த விபத்தின் போது இரண்டு மாணவிகளும், 1 மாணவரும் என மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தின் முதல் கல்லூரி, குமரி மாணவ சமுகத்தின், கல்வியில் கலங்கரை விளக்கு என்றெல்லாம் போற்றப்படும் நாகர்கோவில் ஸ்காட் கலை கல்லூரியில் பிஎஸ்சி. கணினி அறிவியல் 2-ம் ஆண்டு படிக்கும் 34 மாணவ, மாணவியர்கள் மற்றும் 3 பேராசிரியர்கள் என 37 பேர் ஒரு தனியார் பஸ்சில் நேற்று முன்தினம் (பெப்ரவரி-18) காலை மூணாறுக்கு சுற்றுலா சென்றனர்.
மாணவர்கள் பயணித்த பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த வினிஷ் (41) ஓட்டினார். மூணாற்றில் உள்ள சுற்றுலா இடங்கள் சிலவற்றை பார்த்தபின், மேலும் வட்டவடை பகுதியை பார்ப்பதர்க்காக செல்லும் வழி நெடுகிலும் மாணவ, மாணவிகள் உற்சாகம் மிகுதியில் பாட்டும், நடனமாடியபடி பஸ்சில் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.
மலைப்பாதையான மூணாறு – மாட்டுப்பட்டி வழியாக எக்கோபாயிண்ட் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது, திடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலை வளைவில் சென்று கொண்டிருந்த போது பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. பஸ் பள்ளத்தில் சரிவதை பார்த்த மாணவிகள் எல்லோரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினார்கள்.
பஸ்ஸில் இருந்து மாணவிகள் எழுப்பிய குரல் அக்கம் பக்கத்தினர்கள் கேட்டு பஸ்ஸின் அருகே ஓடி வந்தவர்கள். பஸ்யின் முன், பின் பக்கங்களில் உள்ள கண்ணாடிகளை உடைத்து மாணவர்களை பஸ்ஸில் இருந்து மீட்க முயன்றனர்.
விபத்தை பார்த்தவர்கள் விரைந்து செயல்பட்டு விபத்தில் சிக்கிய மாணவ, மாணவியர்களை காப்பாற்றிய போதும். மாணவர் ஒருவரும், இரண்டு மாணவிகளும் சம்பவம் நடந்த இடத்தில், அஞ்சுகிராமம் அருகே உள்ள கனகப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த வேனிகா(19) மற்றொருவர் திங்கள்சந்தையை அடுத்த மாங்குடி பகுதியை சேக் ஆத்திகா(18), நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த சுதன்(19) ஆகியோர் இந்த விபத்தில் மரணம் அடைந்தனர்.
நாகர்கோவில் ஸ்காட் கலைக் கல்லூரி மாணவர்கள் மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது மலைப்பாதையில் பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் மாணவர் ஒருவரும் மாணவிகள் இருவரின் மரணம் ஒட்டுமொத்த குமரி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




