விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற மூன்று பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸார் ஆலங்குளம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இராஜபாளையம் ஆலங்குளம் சாலை காளவாசல் பகுதியில் நின்று கொண்டிருந்த காரில் முன் இருந்த நம்பர் பிளேட்டை இருவர் கழற்றிக் கொண்டிருந்தனர். அப்போது கீழ ராஜகுலராமன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரகாஷ் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
பின்னர் காரை சோதனை செய்தபோது காரின் பின்புற டிக்கியில் பையில் ரூ.100 கள்ள நோட்டு கட்டுகள் இருந்தது தெரிய வந்தது. அதில் மேலும் கீழ்ப்பதிலும் அசல் நூறு ரூபாய் நோட்டு நடுப் பகுதியில் வெள்ளை நிற தாள்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துமணி என்பவரது மகன் பாலசுப்பிரமணி, பருவக்குடி தெற்கு தெருவை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் விஷ்ணுசங்கர், மாரநாடு திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் அஜித் குமார் என தெரிய வந்தது.

விசாரணையில் அட்டை மில் முக்குரோடு பகுதியில் கள்ள நோட்டு மாற்ற இருப்பது தெரியவந்தது. போலீஸார் விஷ்ணு சங்கர், அஜித்குமார், ஆகிய இருவரையும் கைது செய்து ,அவர்களிடம் இருந்த கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து தூத்துக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை தேடி வருகின்றனர்.