வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, காவல்துறை விசாரணையில் அது புரளி என தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்ட கண்ட்ரோல் ரூம்-க்கு ஒருவர் தொடர்பு கொண்டு, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் செல்போனில் தொடர்பு கொண்டவர் மதுரையை சேர்ந்த தமிழன்பன் என்றும், இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதனால் இது புரளி என்றும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திற்கு மிரட்டல்
