• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு கூட்டம்..,

BySeenu

May 27, 2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் உக்கடம் பிலால் நகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஹக்கீம், பொருளாளர் நாசர், துணை தலைவர் முஜிபுர் ரஹ்மான், துணை செயலாளர்கள் ஹஸ்ஸான், சல்மான், வர்த்தக அணி BS ஹமீது மாணவரணி சபீக் அலி மருத்துவ அணி நிஜாமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில துணைத் தலைவர் தாவூத் கைசர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் 4 மாத “முஸ்லிம் இளைஞர்களுக்கான” செயல்திட்ட முறைகள் விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வக்ஃபு திருத்த மசோதா போன்ற இந்திய முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நீதியரசர்கள் நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும்,

பஹல்காம் படுகொலை, அதைத்தொடர்ந்து நடந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் வகையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டப்பட வேண்டும்,

மாணவர்களின் கல்வியோடு விளையாடும் பாசிச பாஜக அரசை கண்டிப்பதாகவும், ஒன்றிய அரசை நம்பி இருக்காமல் மாற்று ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து இந்த வருட RTE எனும் இலவசக் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கயை உறுதி செய்ய வலியுறுத்துவது,

காஸாவில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியான சூழலில் ,இரு நாடு திட்டத்தை குறிப்பிட்ட கால அளவுக்குள் நிறைவேற்ற வேண்டும்,உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில்,கோவை மாநகர் மாவட்ட அனைத்து கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.