கரூரில் தமிழக அரசைக் கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவுபடி தீபம் ஏற்ற சென்றவர்களை தமிழக அரசு தடுத்து நிறுத்தி கைது செய்தது.

இதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் இன்று கரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்திருந்தனர். போலீஸாரின் அனுமதியின்றி இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஐம்பதுக்கு மேற்பட்ட திரண்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவுபடி தீபம் ஏற்றச் சென்றவர்களை கைது செய்த தமிழக அரசு கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 50 க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.




