• Mon. May 6th, 2024

கோவை பி.எஸ்.ஜி.சிறப்பு மருத்துவமனையில் உடல் எடையை குறைத்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்

BySeenu

Apr 14, 2024

கோவை பி.எஸ்.ஜி.சிறப்பு மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை துறை சார்பாக சப்போர்ட் குரூப் மீட்டிங் நடைபெற்றது. இதில் அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

கோவை பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சைத் துறையின் பத்தாவது ஆதரவு குழு சந்திப்பு (சப்போர்ட் குரூப் மீட்டிங்) மருத்துவமனை வளாகத்தில் உள்ள B -பிளாக் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் உடல் பருமன் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கலந்து கொண்டு உடல் எடை குறைத்தது பற்றி தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, மற்றவர்களையும் ஊக்கப்படுத்தினர்.
இதில் சிறப்பு விருந்தினராக சின்னத்திரை நடிகை லட்சுமி கலந்து கொண்டு சிறப்பித்தார். பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனை இயக்குனர், மருத்துவர் புவனேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில்,உடல் பருமன் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் ஆடை அலங்கார அணி வகுப்பு நடைபெற்றது. இதன் நடுவர்களாக, மகளிர் நல ஆலோசகர் மருத்துவர். ஜெயந்தி ஸ்ரீ பெருமாள், மற்றும் திருமதி கோவை ஃபுட்டீஸ் நிறுவனர் .லலிதா கௌதம், ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
மேலும், இம்மருத்துவமனையின் குடல் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் மருத்துவர் பாலமுருகன் ஆகியோர் இந்த ஆதரவு குழு சந்திப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியின், இறுதி நிகழ்வாக உடல்பருமன் அறுவை சிகிச்சைக்கு பிறகு வாழ்க்கை தரம் பற்றி குழு கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சை பயனாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *