• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

செல்போன் கடையை உடைத்து 1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடியவர்கள் கைது

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள செல்போன் கடையை கடந்த 13.10.2021 அன்று மர்ம நபர்கள் உடைத்து கடையிலிருந்து 1,30,000 மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை திருடிச் சென்றுள்ளனர்.

கடையின் உரிமையாளர் தென்காசி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் குற்ற பிரிவு ஆய்வாளர் முருகேசன் அவர்களின் தலைமையில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் மாரிமுத்து, தலைமை காவலர் சீவல முத்து, முதல் நிலைக் காவலர் கார்த்திக், காவலர்கள் சதாம் உசேன், கற்பக சுந்தரபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

இதில், தென்காசி மேல பாறையடி தெருவைச் சேர்ந்த முருகையா என்ற அவரது மகன்களான மகாராஜன் மற்றும் அகிலாண்ட ஈஸ்வரன் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் இருவரும் சேர்ந்து கடையை உடைத்து செல்போனை திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து ரூபாய் 1,30,000 செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி இரண்டு நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.