விரைவில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு போட்டியிடும் வேட்பாளர்கள் இடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று தென்காசி மாவட்டம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உள்ளாட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ள வேட்பாளர்கள் விருப்ப மனுக்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSRயிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன், தென்காசி நகர செயலாளர் சாதீர், நெசவாளர் அணி அமைப்பாளர் KNLS சுப்பையா, கூட்டுறவு சங்க தலைவர் ஷமீம், ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனி துரை, அன்பழகன் முன்னாள் நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
