தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி நகர தந்தை என அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து 156 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் அமைந்துள்ள அன்னாரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மேயர் பெ.ஜெகன், ஆணையர் சி.ப்ரியங்கா, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதுபோல பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.” இந்த அரசு நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அதிகாரி நவீன் பாண்டியன் கலந்து கொள்ள வில்லை என்றொரு குற்றச்சாட்டுகள் பத்திரிகை யாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






; ?>)
; ?>)
; ?>)
