• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

டென்மார்க்கில் 25 வயதிற்குள் திருமணம் ஆகவில்லையென்றால் இதுதான் சம்பிரதாயமாம்…

Byகாயத்ரி

May 27, 2022

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில சம்பவங்கள் விசித்திரமாகத் தோன்றினாலும் அவற்றை நம்பும் மக்கள் தொடர்ந்து அந்த பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அவ்வகையில் டென்மார்க்கில் 25 வயதிற்குள் திருமணம் செய்யாதவர்களுக்கு அவர்கள் குடும்பத்தினரால் இலவங்கப்பட்டை பொடி குளிப்பாட்டும் பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. அதாவது டேனிஸ் சமுதாயத்தில் 25 வது பிறந்தநாளை கொண்டாடும் போது அவருக்கு கல்யாணம் ஆகி இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் 25வது பிறந்த நாளை கொண்டாடும் போது அவர்கள் குடும்பத்தினரால் இலவங்கப்பட்டை பொடியால் குளிப்பாட்டுவார்கள். இது விசித்திரமான தண்டனை என்றாலும் மக்கள் தங்கள் கலாச்சாரமாகவே பின்பற்றி வருகின்றனர்