• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா… கிழிக்கும் சீமான்…

Byகாயத்ரி

Jun 22, 2022

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகின. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 12 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் சீமான் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று மட்டும் பதிவுசெய்திருப்பதும் கண்டனத்திற்குரியது. ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சியதிகாரத்துக்கு வந்த திராவிட ஆட்சியாளர்கள், தமிழை வளர்க்கும் இலட்சணம் இதுதான். தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் இவர்களது திராவிட மாடல் ஆட்சியா வெட்கக்கேடு என பதிவிட்டுள்ளார்.