• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருவாப்புடையார் திருக்கோவில் பாலாலயம்..,

ByM.S.karthik

May 23, 2025

பாண்டிய நாட்டு பாடல் பெற்ற 14 திருத்தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் உப கோவிலான மதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள திரு ஆப்பனூர் என்று சொல்லக்கூடிய திருவாப்புடையார் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் நிகழ்வு நடைபெற்றது.

பாலாலயத்தை முன்னிட்டு சிவாச்சாரியார் செந்தில் பட்டர் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் அறங்காவலர் ருக்மணி பழனிவேல் ராஜன்,அறங்காவலர் குழு மீனாஅன்புநிதி,உபயதாரர் குமார் மெஸ் ராமச்சந்திர குமார் ஜெயமாலா குடும்பத்தினர், உதவி ஆணையர் லோகநாதன் செயல் அலுவலர்/துணை ஆணையர் கிருஷ்ணன் கண்காணிப்பாளர் சரவணன் பேஷ்கார் பாலமுருகன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.