ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் திருப்பரங்குன்றம் கோயில் கண்காணிப்பாளர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில்( 1,05,01,654 ) ஒரு கோடியே 5 லட்சத்து 1 ஆயிரத்து 654 ரூபாய் ரொக்கமாகவும், 201 கிராம் தங்கமும், 3கிலோ 902 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது. மாதத்திற்கு ஒரு முறை திருப்பரங்குன்றம் கோவில் காணிக்கை எனப்படுவது வழக்கம், சென்ற மாதம் உண்டியல் காணிக்கை என்னப்படாததால்

இன்று இரண்டு மாத காணிக்கை பணம் என்பதால் திருப்பரங்குன்றம் கோவில் காணிக்கை எண்ணப்பட்டதில் முதல்முறையாக ஒரு கோடி ரூபாய் தொட்டதாக கோவில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.