• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஆதரித்து திருமாவளவன் பேச்சு..,

ByS.Ariyanayagam

Apr 8, 2026

திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் திமுக வேட்பாளர் இ.பெ. செந்தில்குமாரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் திண்டுக்கல் நகர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது திருமாவளவன் பேசியதாவது:
தமிழ்நாட்டுக்குள் மதவாத சக்திகள் எப்படி நுழைந்து விட வேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டி செயல்படுகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக ஆட்டிப்படைக்க காத்துக் கொண்டிருக்கிறது.

திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால் திண்டுக்கல் தொகுதியில் மறுமலர்ச்சி வரும். அனைத்து நல்ல திட்டங்களையும் கொண்டு வருவதற்கு தம்பி செந்தில்குமார் பாடுபடுவார். மக்களுக்கு நல்ல திட்டங்களை தீட்டுவதற்கும் ஏற்பாடு செய்வார். இவ்வாறு அவர் பேசினார்.