சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான புராண சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் பவித்திர உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று. ஆண்டுதோறும் தோஷ நிவர்த்திக்காக செய்யப்படும் பவித்ர உற்சவம் விழா, கொரோனா பெருந்தோற்று காரணமாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
சௌமிய நாராயண பெருமாள் இரு தேவியருடன் எழுந்தருளினார், சுவாமி முன்பு 108 கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு திருமஞ்சனம் பொடி , மஞ்சள், பால் மற்றும் மூலிகைப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. ஆராதனை மற்றும் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.