• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ரவுடிகளை வைத்து அராஜகம் செய்யும் திருச்செந்தூர் கோவில் உதவி ஆணையர் !

தமிழகத்தில் புகழ்பெற்ற வழிபாட்டு ஸ்தலமான அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் . தற்போது நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கும் நிலையில் தான் பக்தர்களிடம் ரவுடிகளை வைத்து அராஜகம் செய்யும் உதவி ஆணையரின் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சிறப்பு தரிசனம் வரிசை என்ற ஒரு கட்டமைப்பு கோவிலில் இருப்பதால் அங்கு சமூக நீதி நிலைநாட்டப் படுகிறது என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தரிசனம் செய்ய பொது வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சுமார் மூன்று மணி நேரமாக கோவிலுக்குள் அனுமதிக்காமல் சிறப்பு தரிசனம் வரிசையில் நிற்கும் பக்தர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்க பட்டதால் பக்தர்கள் ஆலய நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

ஆனால் அங்கு செக்யூரிட்டி என்று பெயர் வைத்திருக்கும் ரவுடிகளுடன் வந்த உதவி ஆணையர் பக்தர்களுக்கு உரிய பதில் அளிக்காமல் அங்கு அந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த பக்தரின் கைபேசியை கீழே போட்டு உடைத்தது மட்டுமல்லாமல் பக்தர்களை தாக்கியுள்ளார்

இதனால் பக்தர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் சம்பந்தப்பட்ட அந்த உதவி ஆணையர் மீது இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா!? .கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பொதுமக்களிடம் ரவுடிகளை கையில் வைத்துக் கொண்டு அராஜக போக்கை கடைபிடிக்கும் கோவில் உதவி ஆணையர் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையை தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.!