• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆட்கொல்லி கொரானாவின் மூன்றாவது அலை தீவிர தாக்குதல்!.. அசராத பொதுமக்கள், தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் அரசு !…

கடந்த இரண்டு வருடங்களாக உலகையே அச்சுறுத்தி பல லட்சம் உயிர்களை காவு வாங்கிய ஆட்கொல்லி அரசன் கொரோனாவின் கோரத்தாண்டவம் முடிவடையாத நிலையில், தற்போது மூன்றாவது அலை வேகம் அடுத்து இந்தியா முழுவதும் முழுவீச்சில் பரவி வருகிறது.

இதனை தடுத்து நிறுத்த இந்திய அரசும் அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது. உலகமே வியக்கும் வண்ணம் பலகோடி தடுப்பூசிகளை இரண்டு முறை கோடிக்கணக்கானோர் போட்டு உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளனர். அப்படி இருந்தும் கொரோனாவின் கோரத்தாண்டவம் குறைந்தபாடில்லை.

தற்போது மூன்றாவது அறை வீசிக் கொண்டிருக்கிறது .தமிழக அரசு அதனை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரம் மற்றும் மருத்துவ துறை சார்பாக மாவட்டம் தோறும் மாவட்ட நிர்வாகங்கள் துணை கொண்டு ,பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. இதனால் 90 சதவிகிதம் கொரோனாவின் அச்சுறுத்தல் கட்டப்பட்டிருந்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இன்மையால் அதனுடைய வேகம் வீரியம் அடைந்து வருகிறது என்றே சொல்லலாம்.தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும், நோயும் என்பதுபோல் தனக்கு வரவில்லையே என்று ஒவ்வொரு மக்களும் அசால்டாக உள்ளனர்.

தயார் நிலையில் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என்று எத்தனையோ இடங்களை மருத்துவத்திற்காக அரசு தயார் படுத்தி வைத்திருக்கிறது. இவையெல்லாம் எந்த ஒரு உயிரும் இப்பூவுலகை விட்டு சென்ற விடக்கூடாதே என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான். இதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டியது மக்களின் கடமை .அரசு அறிவுறுத்தியுள்ளதுபோல் முக கவசம் அணிவது, கிருமி நாசினி தெளித்து, பொது இடங்களில் சமூக விலகலை கடைபிடிப்பது .தியேட்டர் ,கோயில் வாகனங்கள் ,பேருந்துகளில் அளவாக பயணிப்பது ,உள்ளிட்ட நடவடிக்கைகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்மை உயிர் இழப்புக்கு காரணமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே வரும் காலங்களில் நமக்கும் நம் சந்ததியினருக்கும் நல்ல ஒரு சமுதாயத்தை விட்டு செல்ல வேண்டும் என்றால் , அனைவரும் அரசு அறிவுறுத்தியுள்ளபடி விழிப்புணர்வு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வி. முரளிதரன் இரவு பகல் பாராமல் அதிகாலை 5 மணி முதல் இரவு தூங்குவதற்கு முன்பு வரைகூட குரானாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் நேரடியாகச் சென்று முக கவசங்களை வழங்கியும், அவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். மேலும் காவலர்கள், மருத்துவ அலுவலர்கள் வருவாய் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களையும் இந்த விழிப்புணர்வு பணிகளை முழுவீச்சில் ஈடுபட அறிவுறுத்தி இருக்கிறார்.

அதன் அடிப்படையில் நேற்று ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் டிஎஸ்பி தங்க கிருஷ்ணன் ,கையில் முகக் கவசங்கள் வைத்துக் கொண்டு நேரடியாக பொதுமக்களை சந்தித்து சமூக விலகலை கடைபிடிக்க சொல்லியும், முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முககவசங்களை வழங்கி ,விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதை பார்ப்போர் நெஞ்சில் ஒரு விதமான பாசத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை போல் அனைத்து இடங்களிலும் செயல்பட்டால் ,சென்டிமென்டிற்கு கட்டுப்படும் தமிழர்கள் ,தொடர்ந்து தானாகவே முகக் கவசங்கள் அணிவது சமூக விலககளை கடைபிடிப்பது, கிருமி நாசினிகளை பயன்படுத்துவதை செய்வார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.