கோவையின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வந்த வீடு புகுந்து திருடும் சம்பவங்களுக்கு, நடந்து வந்தது. இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் மணியக்காரர்பாளையம் – புதுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே தீவிர வாகனத் தணிக்கை மற்றும் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாகச் சுற்றித் திரிந்த இரண்டு நபர்களைத் தடுத்து நிறுத்தி, போலீஸார் தங்களது விசாரணை செய்தனர். போலீஸாரைக் கண்டதும் முன்னுக்குப் , பின் முரணாகப் பேசிய அந்த நபர்களைச் சோதனை செய்த போது, அவர்களிடம் தங்கச் செயின்கள், மோதிரங்கள் மற்றும் பிரேஸ்லெட்டுகள் இருந்தது கண்டுபிடித்தவர்.

உடனடியாக அவர்களைத் காவல் நிலையம் அழைத்து சென்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சரவணன் என்பது தெரியவந்தது. இவர்கள் கோவை கிணத்துக்கடவு மற்றும் திருப்பூர் பகுதிகளில் தங்கி, ஆள் இல்லாத வீடுகளைக் குறிவைத்து, வீட்டின் கதவை உடைத்துப் பணம் மற்றும் நகைகளைத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் இடம் இருந்து சுமார் 40 சவரன் தங்க நகைகளை மீட்ட காவல்துறையினர், பிடிபட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.






