• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் பகுதிகளில் காவி உடையில் சுற்றும் திருடர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதிகளில் காவி உடை அணிந்து வீடுகளில் குறி சொல்வது போல் நாடகமிட்டு மயக்க பொடி தூவி பணம்பரிப்பு- இதனால் பொதுமக்கள் பீதி- காவி உடை ஆசாமிகள் சாலை வீதிகளில் சுற்றி திரியும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளன.
நாகர்கோவில் அடுத்த நெசவாளர் காலனி பகுதியில் காவி உடை அணிந்த ஆசாமி ஒருவர்,ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று தங்கள் வீட்டில் பரிகாரம் செய்வதாக கூறி வந்துள்ளார், இந்நிலையில் அங்குள்ள முதியவர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற காவி உடை அணிந்த ஆசாமி தனது கையில் இருந்த மாயப்பொடியை தூவி முதியவரை மதி மயங்க செய்து வீட்டில் இருந்த ரூ14,500 ஐ திருடி சென்றுள்ளார்.இது குறித்து நேசமணிநகர் போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் காவிஉடையில் சுற்றும் திருடர்களால் அப்பகுதியில் பீதியில்ஆழ்ந்துள்ளனர்.