ஆதிதிராவிடர் நலத்திட்ட நிதி உதவி திட்டத்தின் கீழ் உழவர் கரை பகுதியில் பிச்சை வீரன் பேட்டை, குறுக்கு சாலை முதல் முத்துப்பிள்ளை பாளையம் பிரதான சாலை வரை பல்வேறு குறுக்கு சாலைகளில் உள்ள பாலங்களை 6 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொதுமக்கள் கூறிய பல்வேறு குறைகளுக்கு பதில் அளித்தார்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களை முழுமையாக நிரப்ப தேர்வுகள் நடத்தப் பட்டு வருகிறது.
நல்ல கல்வி, சுகாதாரம், உள் கட்டமைப்பை மேம்படுத்துவதை அரசு
செய்து கொடுத்துள்ளது.

மத்திய அரசின் அனுமதி வந்தவுடன் நியமன எம்எல்ஏக்கள் பொறுப்பேற்பார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இந்த ஆட்சியில் எதுவுமே நடக்காதது போன்று சொல்கிறார்கள். உண்மையில் கடந்த ஆட்சியில் தான் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
இப் போது இலவசமாக அரிசி, கோதுமை,முதியோர் உதவித்தொகை உயர்வு,மகளிருக்கு ரூ.1000 என சொல்வதையெல்லாம் செய்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர்
தேர்தல் வரப்போகிறது என்பதால் எதிர்கட்சிகள் எதையாவது குறை சொல்வோம் என கூறுகிறார்கள். புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு என்ற பெயரில், உடைத்து பார்ப்பது பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் செய்யக் கூடாது. இது சரியானது அல்ல. அரசிடம் சொன்னால், சீரமைத்து சரி செய்யும் என்று குறிப்பிட்டார்.







; ?>)
; ?>)
; ?>)