• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்

ByA.Tamilselvan

May 31, 2023

அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் என்.ராம் விளக்கம் அளித்தார். நேருவிடம் செங்கோல் வழங்கியது போன்று வெளியான வீடியோ நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டது. சட்ட ரீதியான ஆட்சி மாற்றம் தொடர்பான எந்த அம்சமும் செங்கோல் வழங்கியதில் இல்லை. நேரு பிரதமராக பதவி ஏற்பதற்கு ஏதேனும் விழா நடத்த வேண்டுமா என்று மவுண்ட் பேட்டன் பிரபு கேட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்களை கவுரவப்படுத்துவதால் பாஜகவுக்கு எந்த பெரிய பயனும் இல்லை என்று கூறினார்.பொன்னியின் செல்வன் படம் வந்ததால, சோழர் கால பெருமையெல்லாம் சொல்லி ஏமாற்ற பார்க்கிறார்கள்” என மூத்த பத்திரிகையாளர் என்.ராம் விளக்கம்!