திருப்பரங்குன்றம் பகுதிக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள சிக்கந்தர் சுல்தான் பாதுஷா பள்ளி நிர்வாகிகளை சந்தித்தார்

விடுதலை சிறுத்தை கட்சி பொதுச் செயலாளரும் காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனை செல்வன் பெரிய ரத வீதியில் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் நிர்வாகிகளை சந்தித்தார்

திருப்பரங்குன்றத்தில் கடந்த மூன்று தினங்களாக மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளில் இருந்து உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கில் சென்று கொண்டிருக்கின்றன.

இந் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விடுதலை சுத்தியல் கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் தர்கா நிர்வாகிகளை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருப்பரங்குன்றம் பெரியதாக வீதியில் உள்ள பள்ளிவாசலில் நிர்வாகிகளுடன் மலை மேல் உள்ள சிக்கந்தர் சமாதியில் நடைபெறும் விழாக்கள் சமய வழிபாடுகளும் கார்த்திகை தீபம் தீபம் ஏற்றுதல் குறித்து விவரங்களை கேட்டு அறிந்தார் .
பொது பள்ளிவாசல் நிர்வாகிகள் மலை மேல் கந்தூரி கொடுக்கப்பட்டதாகவும் தற்போது மலை மேல் உள்ள தர்காவில் கழிவறைகள் கட்டிடங்கள் சிதிலடைந்துள்ளதால் அவற்றை பராமரிப்பு பணிகள் செய்ய காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் சிந்தனை செல்வனிடம் கூறினர்.
இப்போது பள்ளி நிர்வாகிகள் இடம் பேசிய சிந்தனை செல்வன் கூறுகையில் மதங்கள் இடையே சமத்துவம் சகோதரத்துவம் அன்பு மட்டுமே இருந்தது

ஆனால் இங்கு மதங்களின் பெயரால் அரசியல் செய்யப்பட்டு மத நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது திமுக கூட்டணி உள்ளவரை சமூக நீதி காக்கப்படும் என பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கூறினார் பள்ளிவாசல் பகுதியில் நிர்வாகி சந்திக்கும் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் கனியமுதன் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன் கருவேலம்பட்டி முத்துக்குமார் தொகுதி செயலாளர் பனையூர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.




