• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாநாட்டு முடிவுக்கு பின் ஆட்சி மாற்றம் வரும்..,

ByKalamegam Viswanathan

Aug 9, 2025

மதுரை பாரப்பத்தியில் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நடிகர் விஜயின் த வெ. கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியது உட்பட்ட பாரப்பத்தி கிராமத்தில் தமிழக வெற்றி கழக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கான்டி சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெற உள்ளது கார் பார்க்கிங் மற்றும் பொதுமக்கள் அமர உள்ள மேடை உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது .-

மாநாடு நடைபெறும் இடத்தை தமிழக வெற்றி கழக கட்சியின் பொதுச்செயலாளர் புசிய ஆனந்த் தேர்தல் மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதார் அர்ஜுனா கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் ஐஆர்எஸ் உள்ளிட்டோர் பிலா மேடை மற்றும்,பொதுமக்கள் அமரும் இடம் ஆகிய இடங்களை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

என்ன செய்தியாளர்களை சந்தித்த அருண்ராஜ் ஐ ஆர் எஸ் குருகையில் விக்கிரவண்டி மாநாட்டில் கலந்து கொண்டதை விட அதிக அளவில் தொண்டர்கள் மதுரை மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

மனதின் முக்கியமாகவெயில் காலம் என்பதால் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக 2டேங்குகள் வைத்து குழாய் மூலம் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக குழந்தைகள் கர்ப்பிணிகள் அனுமதிக்கப்படவில்லை.

பல்வேறு வெளியூர்களில் இருந்து வந்து தற்போதைய மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையை ஏற்று போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். மேலும் லாஜிக்கல் ஹோட்டல்களில் மாநாட்டு அன்று புக் செய்ய வந்தால் முன்பதிவு செய்து விட்டதாக வருத்தத்துடன் கூறி செல்கின்றனர்.

கூட்டணி குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை ஆனால் கண்டிப்பாக மாநாடு முடிந்த பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என அருண் ராஜ் ஐ ஆர் எஸ் கூறினார்.