• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை –அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ByA.Tamilselvan

Sep 19, 2022

காய்ச்சல் குறித்து பதற்றமடைய வேண்டாம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி
தமிழகம் வந்துள்ள மேகாலயா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜேம்ஸ் ஜே.கே.சங்கமா சென்னையில் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தார். அப்போது இரு மாநிலங்கள் இடையே ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அவசர சிகிச்சை உள்ளிட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில் பன்றி காய்ச்சால் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 1044 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மட்டும் 368 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதிற்கு குறைவாக 42 குழுந்தைகளும், 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் 65 பேரும், 15 முதல் 65 வயதிற்குட்பட்டோர்கள் 192 பேரும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 69 பேரும் அடங்குவர்.
மேலும், 89 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் 264 பேர், அரசு மருத்துவமனைகளில் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகிவிடும், எனவே பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பெற்றோர்கள் காய்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, காய்ச்சல் சரியாகும் வரை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.