தங்கம் விலை நாளுக்கு நாள் கூடி வரும் நிலையில், நவம்பர் 4ஆம் தேதியான இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றும் எந்தவித மாற்றமும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய நாள்.. அதாவது சனிக்கிழமை அன்று தங்கம் விலை 15 ரூபாய் குறைந்திருந்தது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,370 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 8,040 ரூபாயாக உள்ளது.
தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,370 ரூபாயாகவும், 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 58,960 ரூபாயாகவும் உள்ளது. 10 கிராம் தங்கம் விலை 73,700 ரூபாயை எட்டியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்து தங்கம் விலையில் ஏற்றம் இருந்து வந்தது. தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் கொண்டாடப்படும் தந்தேராஸ் பண்டிகைக்கு மக்கள் நகை கடைகளில் குவிந்தனர். அட்சய திருதியை பண்டிகையின் போது வெள்ளி நகை மற்றும் தங்க நகைகளை வாங்குவது செல்வ செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதேபோல இந்தப் பண்டிகைக்கும் மின்னும் பொருட்களை வாங்குவது செல்வ செழிப்பைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை நிலவுவதால் வட மாநிலங்களில் உள்ள மக்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
கோவை மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 106 ரூபாயை எட்டியுள்ளது. சென்னை கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி விலை 1,06,000 ரூபாயாக உள்ளது.
இன்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை
