வாடிப்பட்டி 6வது வார்டில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதை தடுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது பேரூராட்சி கவுன்சிலர் குற்றம் சாட்டிள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு வார்டு மக்களுடன் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 6வது வார்டு பேரூராட்சி கவுன்சிலராக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று வருபவர் பூமிநாதன். இவர் தனது வார்டில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டுமென வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் பேரூராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை தொடங்கினர். பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது அந்தப் பகுதியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கழிவுநீர் கால்வாய் கட்டக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பேரூராட்சி பணியாளர்கள் பணியினை பாதியில் நிறுத்திவிட்டு சென்று விட்டனர்
இது குறித்து பொதுமக்கள் கவுன்சிலர் பூமிநாதனிடம் முறையிட்டதை தொடர்ந்து மீண்டும் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று தனது வார்டு பொதுமக்களுடன் சேர்ந்து பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
பேரூராட்சி அதிகாரிகள் வார்டு கவுன்சிலர் பூமிநாதனை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து வருகின்ற 3ஆம் தேதிக்குள் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிட்டு சென்றார் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி கவுன்சிலர் ஒருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது