• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தேனி: ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் அ.ம.மு.க சார்பில் வேட்புமனு தாக்கல்..!

Byadmin

Feb 2, 2022

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆண்டிபட்டி பேரூராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு மாவட்டம் சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்யபட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 11வார்டுகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஆண்டிபட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கழக அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிகழ்ச்சி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தவச்செல்வம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஸ்,பேரூர் கழக செயலாளர் வஜ்ரவேல் முன்னிலையில் நடைபெற்றது. உடன் வடக்கு ஒன்றிய கழக இணைசெயலாளர் அய்யணன்,அமைப்பு சாரா ஓட்டுணரனி செயலாளர் வெற்றிவேலன் பேரூர் கழக இணைசெயலாளர் ரவிக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்