பேரூராட்சி பகுதியில் துப்புரவு பணிகள் மற்றும் குடிநீர் வரவில்லை என்ற புகாரை அடுத்து செயல் அலுவலரை தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் எச்சரித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அண்ணன் தங்கம் தமிழ்செல்வன் நா இப்படி நடந்துக்கிட்டாரு அவர் வந்தா சூப்பரா தான் இருக்கும்.., நடவடிக்கையும் பார்த்து பாராட்டுக்களும் குவிந்து வண்ணமும் இருந்தது.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் டாஸ்மாக் பார் நடத்தி வரும் கார்த்திக் என்பவர் தனது பாரின் உள்ளே இருக்கும் குப்பைகளை அகற்ற சொல்லி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி துப்புரவு பணியாளர்களை அவதூறாக பேசியதாகவும், மேலும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று செயல் அலுவலரை தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக செயல் அலுவலர் யோகஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக் என்பவர் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து பேரூராட்சியின் துப்புரவு பணியாளர் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இதனால் பேரூராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றவில்லை மற்றும் தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள், கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் வருகை தந்து ஆய்வு செய்தார். அப்போது துப்புரவு பணியாளர்களிடம் குறைகளை கேட்டிருந்தார்.
பின்னர் செயல் அலுவலரிடம் விசாரணை செய்த தங்க தமிழ்ச்செல்வன் பிரச்சனைகள் குறித்து கேட்டிருந்து துப்புரவு பணிகள் மற்றும் குடிநீர் முறையாக வழங்க வேண்டும். என்று கூறி பேரூராட்சி திட்டை இயக்குனரையும், செயல் அலுவலரை எச்சரித்து சென்றார்.