மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தேனி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையை தேனி எம்.பி. ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் இணைந்து பூமி பூஜை செய்து பணிகள் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேனி எம்.பி., ரவீந்திரநாத்., புரட்சி தலைவர், புரட்சி தலைவி அருளாசியுடன் இதற்கு முன்பு நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர் கொண்டோமோ அதே போன்று வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் எனவும், அடுத்தடுத்த சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம், காலம் பதில் சொல்லும், நீதி தேவதை சரியான தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், தேர்தலுக்கு முன்பு எப்படி வேண்டுமானாலும் கருத்துக் கணிப்பு வரலாம், தேர்தலுக்கு பின் மக்களின் மனநிலை என்னவோ அதுதான் இந்த தேர்தலிலும் பிரதிபலிக்கும் என பேசினார்.