• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

உலக அளவில் முதன்முதலாக உடல் கூறியல் துறையில் பைபர் கிளாஸ் எம்பெட்டிங் முறையை கண்டுபிடித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி சாதனை.

ByJeisriRam

May 25, 2024
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது .இங்கு உள்நோயாளிகளாக 1600 பேரும், வெளி நோயாளிகளாக தினந்தோறும் 3000க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தேனி மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று நலமுடன் சென்று வருகின்றனர்.

பல்வேறு சாதனைகளை மருத்துவக் கல்லூரி பல கட்டங்களில் நிகழ்த்தி வருகிறது. அதில் ஒரு கட்டமாக உடற்கூறியல் துறையில் உடல் உறுப்புகள் மற்றும் அதன் முழு உடலை பாதுகாப்பாக வைக்க பைபர் கிளாஸ் எம்பெட்டிங் என்ற புதிய முறையை உலகிலேயே முதன் முதலில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறையில் துறை தலைவர் மருத்துவர் எழிலரசன் தலைமையிலான மருத்துவர் குழுவினர் அறிமுகப்படுத்தி சாதனை படைத்திருக்கிறார்கள். இதற்கான காப்பு உரிமையும் வேண்டி விண்ணப்பித்துள்ளார்கள்.

இதுகுறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் பாலசங்கர் தலைமையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கப்பட்டது . அவர் கூறியதாவது உடல் கூறியல் அருங்காட்சியகத்தில் மனித உடல் மற்றும் உடல் உறுப்புகளை பாதுகாக்கும் முறைகளில் இழைக் கண்ணாடியில் பாதுகாக்கப்படுவது என்பது புதிய முயற்சியாகும். பிளாஸ்டினேசன் என்னும் முறை முதல் முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த கந்தர் என்பவரால் 1977-ல் கண்டுபிடிக்கப்பட்டது .இந்தியாவில் ஒரு சில மருத்துவ கல்லூரிகளில் மட்டுமே இம்முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் அரசாங்க மருத்துவக் கல்லூரிகளில் அரசு தேனி மருத்துவக் கல்லூரியில் தான் முதல் முறையாக இம்முறை செய்யப்பட்டுள்ளது.

இம்முறை உடல் கூறியல் துறை தலைவரான மருத்துவர் எழிலரசன் என்பவரால் 2012ல் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது இந்த பிளாஸ்டினேசன் செய்த உடல் உறுப்புகள் மற்றும் அதன் முழு உடலை பாதுகாப்பாக வைக்க ஃபைபர் கிளாஸ் எம்பெட்டிங் என்ற புதிய முறையை உலகில் முதன் முதலில் அரசு தேனி மருத்துவக் கல்லூரி உடகூறியல் துறையில் அறிமுகப்படுத்தி இருக்கின்றோம். இதற்கு காப்புரிமை வேண்டியும் விண்ணப்பித்துள்ளோம். இம்முறையில் மனித சந்தையில் கிடைக்கும் பிசின் என்ற ரசாயன பொருளை உயர் வெப்பத்தில் 100 டிகிரி பிளாஸ்டினேசன் செய்யப்பட்ட உடல் மற்றும் உடல் உறுப்புகள் மீது ஊற்றப்பட்டு, மிகவும் குறைவான வெப்பம் (20 டிகிரி சென்டி கிரேட் ) உள்ள அறையில் 24 மணி நேரம் வைத்து, பின் அவைகள் உலர வைக்கப்படுகிறது .இந்த பைபர் கிளாஸ் எப்பெட்டிங் முறையில் தயாரிக்கப்படும் உறுப்புகள் மற்றும் மனித உடல்களை எளிதில் அழிக்க முடியாது. வருட கணக்கில் பாதுகாப்பாக வைக்கலாம். மேலும் இம்முறை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது .பார்மவின் திரவத்தின் பக்க விளைவுகள் எதுவும் மற்றது.

உடல் கூறியல் துறையில் மாணவர்களின் கல்விக்கு உபயோகப்படுத்தலாம். நோய்க்குறியியல் துறைக்கான மாதிரிகளையும் இம்முறையில் பயன்படுத்தலாம் .குறைபாடு உள்ள சிசுக்கள், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வேண்டாத மனித உறுப்புகள் ,குறுக்கு வெட்டு மாதிரிகள் போன்றவற்றையும் சம்பந்தப்பட்ட துறைகளில் வைத்து மாணவர்களின் கல்விக்கு உபயோகப்படுத்தலாம், என்று தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது மருத்துவ கண்காணிப்பாளர், ஆர் எம் ஓ ,துணை கண்காணிப்பாளர், துறை தலைவர்கள், மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்பு உடற்பாகங்கள் மற்றும் உடல்களை செய்தியாளர்களுக்கு காட்சிப்படுத்தினார்கள்.