தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் தேக்கம்பட்டி பாலசுந்தராசு அவர்களின் 73 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் நினைவிடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வீரவணக்கம், வீரவணக்கம் என கோஷங்களை எழுப்பினர்

நாட்டுப்புற பாடகர் ஆன தேக்கம்பட்டி சுந்தராசு நாட்டுப்புற பாடல்கள் மூலம் பிரபலமடைந்தவர். மேலும் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் உரிமைகளுக்காகவும் பாடுபட்டவர். 73 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று சொந்த ஊரான தேக்கம்பட்டியில் உள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சிகள், பகுதி பொதுமக்கள் என ஏராளமான அஞ்சலி செலுத்தினர்.

மேலும் நாட்டுப்புற பாடகரும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக பாடுபட்ட தேக்கம்பட்டி சுந்தராசு-க்கு மணிமண்டபம் கட்டி திருஉருவச் சிலை அமைக்கப்பட வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோரிக்கை வைத்துள்ளனர்.

