திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குருநாதநாயக்கனூர் கிராமம் கே.புதூர் சிவகிரியில் தேவர்மலை அவதாரிக்கரடு, சந்திரமலை. ஆண்டாள் கரடு என்கிற சுக்கிர மலை ஆகிய நான்கு மலைகளுக்கு அமைந்துள்ள மனோன்மணி அம்பாள் உடனுறை ஸ்ரீஸ்படிக லிங்கேஸ்வரர், ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர் திருக்கோவில் 13 ஆம் ஆண்டு தீர்த்த கலச விழா நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் சென்று ஆறு சென்று புனித நீர் கலசங்கள் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வந்தனர்.
தீர்த்தக்கலசங்கள் சிவகிரி மலையை சுற்றி மேளதாளம் முழங்க ஊர்வலமாக கிரிவலம் எடுத்து வந்து ஸ்ரீ ஆதிலிங்கேஸ்வரர் மகா கணபதி, ஸ்ரீ ஸ்படிக லிங்கேஸ்வரர் மற்றும்
ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர் மூலவர்களுக்கு தீர்த்தம் செலுத்தி அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
—-




