தீரன் சின்னமலை 219வது நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு 15.பி.மேட்டுப்பட்டி கவுண்டர் உறவின்முறை சங்கம் சார்பாக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர்.