காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த சுரக்குடியில் மிக பழமையான ஸ்ரீஅன்பு மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த 14ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது.விழாவின் முக்கி நிகழ்வான தீமிதி திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக விரதமிருந்து தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

முன்னதாக ஸ்ரீஅன்பு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து மாலை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ அன்பு மாரியம்மன் வீதியுலாவாக வந்து தீக்குழிக்கு முன் வந்த உடன் கரகம் மற்றும் மாரியம்மனுக்கு விரதமிருந்த பக்தர்கள் தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.விழாவில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.