• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

செல்லமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா..,

ByR. Vijay

May 27, 2025

நாகை அருகே வடுகச்சேரி அருள்மிகு செல்லமாரியம்மன் ஆலய வைகாசி தீமிதி திருவிழா; விரதமிருந்து காப்புக்கட்டிய 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரியில் பழமைவாய்ந்த அருள்மிகு செல்லமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் வைகாசி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். இந்த ஆண்டின் வைகாசி திருவிழா கடந்த 19 ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பூச்சொரிதல், அபிஷேக ஆராதனை, காவடி, மாவிளக்கு, அம்மன் வீதியுலா காட்சிகள் நடைப்பெற்று வந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று நடைப்பெற்றது. இதில் விரதமிருந்து காப்புக்கட்டிய 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு வீதி உலா காட்சி நடைப்பெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.