• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உலகின் முதல் குளோன் ஓநாய்… அசத்திய சீன விஞ்ஞானிகள்..

Byகாயத்ரி

Sep 20, 2022

பெய்ஜிங்கைச் சேர்ந்த மரபணு நிறுவன விஞ்ஞானிகள், ஒரு காட்டு ஆர்க்டிக் ஓநாயை உலகில் முதல் முறையாக வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளனர்.இந்த ஆராய்ச்சி குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் “இரண்டு வருட கடினமான முயற்சிகளுக்குப் பிறகு, ஆர்க்டிக் ஓநாய் வெற்றிகரமாக குளோனிங் செய்யப்பட்டது” என்று தெரிவித்தனர்.மாயா என்ற பெயரிடப்பட்ட அந்த குளோன் ஓநாய் பிறந்து 100 நாட்கள் பிறகும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மேலும் இந்த ஆராய்ச்சி அரிய மற்றும் ஆபத்தான விலங்குகளின் இனப்பெருக்கத்தில் குளோனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான மைல்கல்லைக் இது குறிக்கிறது.