நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக வனப்பகுதியில் முழுவதும் பசுமையாக காட்சியளிக்கின்றன.

இதனால் வனப் பகுதிக்குள் சபாரி செல்லும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்த்து ரசிக்கின்றனர். குறிப்பாக ஒரே இடத்தில் யானை புலி உள்ளிட்ட வனவிலங்குகள் எதிரெதிரே உலாவி துரத்தும் காட்சிகளையும் பார்த்து வரும் சுற்றுலா பயணிகள் நேற்று முதுமலை வனப்பகுதிக்குள் செல்லும்போது புலி இருப்பதை பார்த்தனர். அப்போது அதே இடத்தில் யானையும் இருந்தது புலியை பார்த்தவுடன் காட்டு யானை ஆக்ரோஷமாக பிளரிக் கொண்டு புலியை துரத்தியது.
சிறிது தூரம் வேகமாக யானையிடம் இருந்து தப்பித்து ஓடிய புலி மெதுமாக வனப்பகுதிக்குள் நடந்து சென்றது. இந்த மெய்சிலிர்க்கும் காட்சிகளை நேரடியாக கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் பிரமிப்படைந்தனர்.