• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

குமரி தொகுதியை கைப்பற்றுவரா தொண்டர்கள் எதிர்பார்ப்பு..,

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள மயிலாடி பேரூராட்சியில் தீவிர திமுக தொண்டராக, முன்னாள் முதல்வர் கலைஞர், தளபதி மு.க ஸ்டாலின் ஆகியோரின் முரட்டு பக்தர். திமுகவில் 1984-ல் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பிரிதிநிதியாக கட்சியில் பொறுப்பு ஏற்றுக் கொண்ட நாள் தொடங்கி இன்று வரை அனைத்து போராட்டங்கள் பொது கூட்டங்கள், மாநாடு என அனைத்திலும் முதல் ஆளாக களப்பணியாற்றுபவர், 1997 முதல் 2022 வரை மயிலாடி பேரூர் செயலாளராக பணியாற்றியவர், 2013 முதல் 2022 வரை திமுக தலைமை செயற்குழு உறுப்பினா கட்சி தொண்டர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள், மாநில தலைவர்கள், தோழமை கட்சியினர் எதிர்கட்சியினர் என அனைவரிடமும் நற்பெயர் பெற்ற
சாய்ராம்.

மயிலாடி பேரூராட்சி தலைவராக 2001 முதல் 2015 வரை மூன்று முறை மக்கள் நேரிடையாக வாக்களித்து வெற்றிவாகை சூடியவர். குறிப்பாக 2011 நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல், அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக தோல்வியை சந்தித்த நிலையிலும் மயிலாடி பேரூராட்சி தலைவர் தேர்தலில் முழு பலத்துடன் வெற்றியை தக்க வைத்தவர்

இந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பேரூர் செயலாளரும் அதிமுக வேட்பாளருமான ஜோதி (எ) கணேசன் உள்பட அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்து வெற்றி பெற்று திமுக தலைவர் கலைஞர், குமரி மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் ஆகியோரிடம் பாராட்டை பெற்றவர். அன்றைய குமரி மாவட்ட ஆட்சி தலைவர்கள் ராஜேந்திர ரத்னு , ஜோதி நிர்மலா ஆகியோரிடம் பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக மாற்றிய திற்கும் மக்கும் குப்பை மக்கா குப்பைகளை தனிதனியாக பிரித்து திடக்கழிவு மூலம் தமிழகத்தில சிறந்த பேரூராட்சி தலைவர் என விருதுகளை பெற்றவர்.

மேலும் மயிலாடி பால் கூட்டுறவு சங்க தலைவர் தேர்தலிலும் போட்டியிட்டு ஐந்து வருடம் பால் கூட்டுறவு சங்க தலைவராகவும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டுறவு சங்க தலைவராகவும் பணியாற்றினார். குமரி மாவட்டத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி பிரதிநிதியாக மக்கள் பணியாற்றி வருகிறார்.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் மயிலாடி பேரூராட்சி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்திலேயே கணவனும், மனைவியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்ற பெருமையை சாய்ராம் மற்றும் அவரது மனைவி ஜெயலெட்சுமி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் மட்டுமின்றி, ஆன்மீகத்திலும், சமூக சேவைகளிலும், பொது வாழ்க்கையிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, அனைத்து சமூக, மத மக்களிடம் நற்பெயர் பெற்றவர் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அனைவராலும் மிகவும் அறியப்பட்டவர். ஜாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டு ஒரு சகோதரனாக பழகும் இவர் சமூக சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டதால் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான பக்தர்கள் தவறாமல் செல்லும் உவரி சுயம்புலிங்கசுவாமி கோயில் இந்து நாடார் மடத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பதவியில் உள்ளார் . மயிலாடி ஆராட்டு விழாவில் மக்களோடு மக்களாக நின்று அவ்விழா சிறப்பாக நடைபெற பெரும் பங்காற்றி வருகிறார். இவர் ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை அண்ணதான குழுவை ஆரம்பித்து வருடந்தோறும் ஆயிரக்கனக்கான மக்களுக்கு உணவு அளித்து வருகிறார்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக சார்பில் விருப்பமனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. கட்சியின் தலைமைக்கு மிகவும் அறியப்பட்ட சாய்ராம் இந்த முறையும் தனக்கு சீட்டு கேட்டு விருப்பமனு அளித்துள்ளார். 2011 முதல் தொடர்ந்து திமுக தலைமையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அனைத்து சட்டமன்ற தேர்தலுக்கும் விருப்பமனு அளித்து காத்திருக்கிறார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியை இம்முறை இந்து நாடார் சமூக புதியவர் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கபடும் என பேச்சு இருப்பதினால், சுமார் 20 வருடமாக உள்ளாட்சி பிரிதிநிதியாக செயல்பட்டு, கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தீஸ்வரம், இராஜாக்கமங்கலம் தோவளை ஒன்றியங்களில் அனைத்து மக்களாலும் அறிய பட்ட சாய் ராமுக்கு வாய்ப்பு கிடைக்கும் என பரவலாக பேசபடுவதால் தற்பொழுது சென்னையில் முகாமிட்டுள்ளார்.

202 1 தேர்தலிலும் திமுக சார்பில் போட்டியிட தீவிர முயற்சி எடுத்தவர். எனவே இந்த முறை சாய்ராமுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கட்சியில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.