பாகிஸ்தானுக்கு மிக பெரிய அச்சுறுத்தலை ஒன்றிய அரசு செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும், பயத்தை காட்ட வேண்டும் அதை பிரதமர் செய்வார் என நம்புகிறோம் என உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டி கிராமத்திற்கு கல்லூத்து கிராமத்திலிருந்து செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் முயற்சியில் 65 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி, சாலையை அகலப்படுத்தி சீரமைத்து கொடுத்ததற்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச் செல்வனுக்கு உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேனி எம்.பி.தங்கதமிழ்ச்செல்வன்..,
நான் வாங்கு சேகரிக்க வரும் போதும், நன்றி தெரிவிக்க வந்த போதும் இந்த சாலையை அகல படுத்தி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர், இடையில் ஒரு தனியார் பள்ளி வாகனமும் பள்ளத்தில் சிக்கியது, இது குறித்து அறிந்து அதிகாரிகளிடமும், அமைச்சர் பி.மூர்த்தியிடமும் முறையிட்டதில் 65 லட்சம் நிதி ஒதுக்கி குறுகிய காலத்தில் சாலையை அகல படுத்தி, சீரமைத்து கொடுத்துள்ளனர்.
கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விஜய் சாலை வழியாக சென்றது ரோடு ஹோ என சொல்ல முடியாது, துணை முதல்வர் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறார் மக்கள் கூடினர், விஜய் கட்சி நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் இரண்டையும் ஒப்பிட்டு பேச முடியாது.
உசிலம்பட்டி, ஆண்டிபட்டியில் புறவழி சாலை அமைக்க பாராளுமன்றத்தில் நான்கு முறை பேசிவிட்டேன். அதற்கான திட்ட மதிப்பீடு தயாராகி வருகிறது, இந்த ஆண்டுக்குள் உசிலம்பட்டி மற்றும் ஆண்டிபட்டிக்கு புறவழி சாலை அமைக்க ஒப்புதலை பெற்றுவிடுவேன் என நம்புகிறேன்.

காஷ்மீரில் நடந்த கொடுமையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது பாஜக அரசு எதிர்கட்சிகளை அடக்குவதில் தான் கவணம் செலுத்துகிறதே தவிர உள்துறை அமைச்சர் இதிலும் கவணம் செலுத்தி மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் நல்லது என்பதை இனிமேலாவது புரிந்து கொண்டால் நல்லது.
பாக்கிஸ்தானுக்கு மிக பெரிய அச்சுறுத்தலை ஒன்றிய அரசு செய்யும் என்ற நம்பிக்கை இருக்கு, நதியை தடுகிறோமோ, எதை தடுக்கிறோமோ தீவிரவாத இயக்கத்தை ஒழிக்க பிரதமர் இறங்க வேண்டும், இல்லையெனில் பயம் விட்டு போகும், அந்த பயத்தை காட்ட வேண்டும் அதை செய்வார் என நம்புகிறோம்., என பேட்டியளித்தார்.