• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடு பாலத்தில் பழுதான லாரியை நிறுத்தி சென்ற, ஓட்டுனருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்…

ByKalamegam Viswanathan

Sep 8, 2023

மதுரை பைபாஸ் சாலை போடி லயன் வி. ஓ. சி. பாலத்தில் கலவை எந்திரம் கொண்டு செல்லும் லாரி ஒன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து காளவாசல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது விஓசி பாலம் அருகே வரும் பொழுது வாகனம் பழுதாகி நின்றுவிட்டது. லாரி ஓட்டுநர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு எங்கேயோ சென்றுவிட்டார். இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே சம்பவ இடத்திற்கு சென்ற அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் வாகன ஓட்டுனரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் முதலில் போக்குவரத்தை சீர் செய்வதற்கான பணியை மேற்பட்டனர்.

லாரி ஓட்டுனரை தேடும் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் சுமார் முக்கால் மணி நேரத்திற்கு மேலாக லாரி ஓட்டுனர் லாரி அருகே வரவில்லை பின் அதே நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஒன்று பின்னால் வந்து கொண்டு இருந்தது. அந்த ஓட்டுநருடன் உங்கள் மேலாளரின் தொலைபேசி எண்ணை தாருங்கள் என கேட்ட பொழுது எதிர் புறம் மீண்டும் ஒரு அதே நிறுவனத்தின் லாரி பாலத்தில் ஏறி வந்து கொண்டிருந்தது. இருபுறமும் அவர்கள் நின்றவர் மேலும், போக்குவரத்து ஆனது ஸ்தம்பித்தது துரிதமாக செயல்பட்ட போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடு பாலத்தில் வாகனத்தை நிறுத்தி எங்கேயோ சென்ற ஓட்டுனருக்கு சுமார் 2500 ரூபாய் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் லாரி ஓட்டுனரை கடுமையாக எதிர்த்து அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநர் அஜாகரையால் சுமார் ஒரு மணி நேரம் பைபாஸ் சாலையில் போடி லைன் மேம்பாலத்தில் இருபுறமும் போக்குவரத்து ஆனது பாதிக்கப்பட்டது. எனினும் போக்குவரத்து போலீசாரி துரித செயல்பாட்டால் போக்குவரத்து மீண்டும் சீரானது.