நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லாக்கு திருவிழா வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ஒரு உபயதாரர்கள் கொண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
குன்னூர் பகுதியில் வாழும் மலையாள மக்கள் ஆண்டுதோறும் முத்துப்பல்லக்கு திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டினை சிறப்பிக்கும் விதமாக மலையாள மக்களின் பாரம்பரிய உடையணிந்து முத்துப்பல்லக்கில் கலந்து கொண்டனர். பின்பு நடந்த ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க, குடைகள் சூழ பெண்கள் சீர்வரிசை தட்டு ஏந்தி வந்தனர்.
இதில் ஆடல் பாடல்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்பு இரவில் நடைபெற்ற முத்துல்லக்கு ஊர்வலத்தில் வண்ண ஒளியில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு முழுவதும் வாண வேடிக்கையுடன் இரவை பகலாக்கும் வகையில், வெடி நிகழ்ச்சி உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்தது. மலையாள திருவிழாவாக என்பதால், நீலகிரி மட்டுமின்றி, கேரளா மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.