திராவிட கட்சிகளில் குறிப்பாக திமுக அதிமுக ஏதாவது ஒரு கட்சி இன்னும் பலவீனப்படும்போது இந்த கோரிக்கை வலுவாக மாறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர் சந்தித்து

வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய உள்ளோம். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், சிறுபான்மை மக்களுக்கு எதிரான மோசமான ஒரு தாக்குதலாக அமையும். பாஜக அரசு இஸ்லாமிய உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒவ்வொரு திட்டங்களாக நிறைவேற்றி வருகிறது.
இது இந்த நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக போய் முடியும். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க முடியாது என்பது அமித்ஷாவுக்கே தெரியும். வட இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைக்கலாம் என்ற கருத்தை தான் அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை இன்னும் அதி எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது இன்னும் அதிமுக பாஜக ஒரு அணிய அமைக்க முடியவில்லை . புதிதாக கட்சி தொடங்கிய விஜய் அவர்களும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை.
பாஜக அதிமுக தாவெக மூன்று கட்சிகளுக்கும் இரண்டாம் இடத்துக்கு தான் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக் கூறுவது நகைச்சுவை கூறியது வட இந்தியாவில் பல மாநிலங்களில் அவர்களின் பூர்வீக தாய்மொழி அழிந்து போய் உள்ளது.
ராஜஸ்தான் உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட சட்டமன்றத்தில் தங்களுடைய தாய் மொழி அழிந்து விட்டதாக பேசக்கூடிய சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்புக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதுக்கு காலம் கனியும் அதற்கான சூழல் இன்னும் அமையவில்லை திராவிட கட்சிகளில் குறிப்பாக திமுக அதிமுக ஏதாவது ஒரு கட்சி இன்னும் பலவீனப்படும்போது இந்த கோரிக்கை வலுவாக மாறும்.
திமுக கூட்டணியில் முரண்பாடுகள் இருக்கலாம் கருத்து உரசல்கள் இருக்கலாம். ஆனால் கொள்கைகளில் ஒருமித்த பார்வை உள்ளது. ஒரே நேர்கோட்டில் உள்ளோம். எனவே திமுக கூட்டணி வலுவாகும் உறுதியாக உள்ளது. அதிமுக பாஐக கூட்டணி அடிப்படையிலேயே கொள்கைப் பொருந்தா கூட்டணி.













; ?>)
; ?>)
; ?>)