• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

திருடப்பட்ட நகை மற்றும் பணத்தை திருடிய வீட்டின் முன்பு போட்டு விட்டு சென்ற திருடர்களால் பரபரப்பு.., போலீசார் விசாரணை…

ByKalamegam Viswanathan

Dec 3, 2023

மதுரை சமயநல்லூர் அருகே கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் வீட்டில் 14 பவுன் மற்றும் 4 லட்சத்தி 45 ஆயிரம் ரூபாயை மர்ம அவர்கள் திருடி சென்றதாக சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் நேற்று மாலை கிராமத்தின் சார்பாக தண்டோரா போடப்பட்டு திருடு போன நகை மற்றும் பணத்தை கொண்டு வந்து வைக்கும்படி கேட்டுக் கொண்டனர் அதைத் தொடர்ந்து நேற்று இரவு கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது இருட்டை பயன்படுத்திய திருடர்கள் திருடிய நகை மற்றும் பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடிய வீட்டின் முன்பு வந்து வைத்து விட்டு சென்று விட்டனர் நகை மற்றும் பணம் திரும்ப கிடைத்ததில் கண்ணனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் திருடியவர் யார் என்பது உறுத்தலாக இருந்ததால் காவல்துறை மூலம் திருடிய நபர்களை தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், இது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரித்து வருவதாக தெரிவித்தனர் மதுரை அருகே திருடிய நகை மற்றும் பணத்தை திருடர்களே வீட்டின் முன்பு வைத்து விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.