• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் செயின் பறித்த கொள்ளையன் சிக்கினான்

ByKalamegam Viswanathan

May 29, 2023

மதுரை சோழவந்தான் அருகே துணிகரம் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் தங்க செயின் பறித்து சென்ற கொள்ளையன் சி.சி.டி.வி.கேமராவால் சிக்கியதால் பரபரப்பு
மதுரை சோழவந்தான் அடுத்துள்ள மேலக்கால் பகுதியில் வசித்து வருபவர் கருப்பாயி (70), கணவனை இழந்த நிலையில் ஆதரவின்றி வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார்.இதனை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த படையப்பா (எ) ஆறுமுகம் நேற்று நள்ளிரவு மூதாட்டியின் வீடு புகுந்து மூதாட்டியை கை, கால்களை கட்டிபோட்டு கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து விட்டு தப்பி சென்றார்.மூதாட்டி கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டனர்.இந்த சம்பவம் அருகிலிருந்த சி.சி.டி.வி.கேமரா காட்சியில் பதிவாகியிருந்தது.இதனிடையே நகை பறிப்பில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த வாலிபர் படையப்பா (எ) ஆறுமுகத்தை காடுபட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து மூதாட்டியின் 5 சவரன் தங்க நகையை மீட்டனர்,.