“நீங்க சொல்லி தான் எனக்கே தெரியும்.என் கட்டுப்பாட்டுல இருக்குற கோவில் அதிகாரிகளா இப்படி செஞ்சாங்க? நான் என்னன்னு விசாரிக்கிறேன்.என்று சொல்லி ஜக வாங்கி இருக்கிறார் இந்து சமய அறநிலைத்துறையின் அமைச்சர் சேகர்பாபு. அப்படி அதிர்ச்சியான சம்பவங்கள் எங்கு நடந்த அரங்கேறி இருக்கின்றது, ஏன் கோவில் அர்ச்சகர்கள் அதிர்ச்சியில் உறைந்து ஆடிப் போய் இருக்கிறார்கள் என்பதை பற்றி விரிவாக எழுதுகிறது நமது Arasiyaltoday…, மேலே படிப்போம் வாங்க…
மதுரை மாவட்டம் தற்போது இந்து சமய அறநிலையத் கட்டுப்பாட்டில் பெரிய கோவில் முதல் சிறிய கோவில் வரை இயங்கி வருகின்றது. இதில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள நேதாஜி ரோட்டில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுத சுவாமி கோவிலும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால தண்டாயுதபாணியை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாலதண்டாயுத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி அர்ச்சகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றனர். அந்த அறிக்கையில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்துவது சுவாமிக்கும், அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை புடுங்கி உண்டியலில் போடும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அர்ச்சகர்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர். இந்த நிலையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோவில் அர்ச்சகரில் தட்டில் விழும் காசை கட்டாயமாக காவலில் இருக்கும் ஊழியர்கள் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் தான் போட வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளது. இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தால் அர்ச்சாரர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அர்ச்சகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் நம்மிடம் பேசிய அர்ச்சகர்கள் …
எங்கள் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி தான் தட்டில் காணிக்கையாக நாங்கள் வாங்குகிறோம். இதை இங்க இருக்கிற அதிகாரிகளும், அறங்காவலர்களும் கோவில் பணியாளர்களும் செய்திருக்கின்றனர். இது மன்னிக்க முடியாத குற்றமும் கூட எங்கள் வாழ்வாதாரத்தை கெடுக்கின்ற நோக்கில் இந்த சுற்றறிக்கை இருக்கின்றது. ஏன் இப்படி செய்தார்கள் என்று எங்களுக்கு புலப்படவில்லை என்று மட்டும் வேகத்தோடு அர்ச்சகர்கள் தங்களது குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களிடம் நாம் கேட்டபோது …
இது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது எனவும், அப்படி யாரும் சுற்றறிக்கை அனுப்ப வாய்ப்பு இல்லை எனவும் என ஜகா வாங்கி விட்டார் . அறிக்கை ரத்து செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம்.





