• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பொதுமக்கள் நன்கொடை செலுத்த க்யூ.ஆர்.கோடு வசதியை அறிமுகம் செய்த கோவில் நிர்வாகம்..,

ByKalamegam Viswanathan

Sep 28, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை நேரடியாக திருக்கோவில் அலுவலகத்தில் செலுத்தி வந்தனர். மேலும் இணையதள வசதி மூலமாக பக்தர்கள் திருக்கோவில் வங்கி கணக்கில் காணிக்கைகள் மற்றும் நன்கொடை செலுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது கூடுதலாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தாங்கள் கோவிலுக்கு செலுத்த நினைக்கும் நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை அலைபேசி மூலமாக செலுத்துவதற்கு கியூ.ஆர்.கோடு வசதியை பயன்படுத்தி தங்களின் அலைபேசி மூலமாக நன்கொடைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருக்கோவில் வளாகத்திற்குள் பிரத்தியேகமாக மிகப்பெரிய கியூ.ஆர்.கோடு உடன் கூடிய பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது.